உதவிக்கு இங்கே பார்க்கலாம் .
ஆனால் கையிலேயே இருக்கும் செல்போனில் தமிழில் படிக்க எழுத முழுமையான தீர்வு இல்லாமல் இருந்தது.ஐபோனிலும் நோக்கியாவின் சில மாடல்களிலும் மட்டுமே தமிழ் படிக்கும் வசதி இருக்கிறது .
Update : எல்லா செல்போன்களிலும் தமிழ் படிக்க ஒபேரா மினி பிரவ்சர் உதவுகிறது , உதவிக்கு இங்கே(இந்த வழிமுறை ஆண்டாய்ட் மொபைலுக்கு மட்டுமல்லாமல் எல்லா செல்பேசிகளுக்கும் பொருந்தும்)
ஆண்ட்ராய்ட் (Android) போன்களுக்கு மட்டுமேயான தமிழ் உலவி ஒன்று (SETT Browser) வெளியிடப்பட்டுள்ளது , மிகச்சிறப்பாக இயங்குகிறது , பதிவிறக்க இங்கே செல்லவும் (இதை செய்தவர் இலங்கை வாழ் சிங்கள மாணவர் , தன் கல்லூரி பயிற்சிக்காக செய்துள்ளார்)

Update : Android போனுக்கு தமிழ் கீபோட் செய்துள்ளார்கள் , அது வெற்றிகரமாக இயங்குகிறது , http://twitter.com/gurujegadeesan
Download android tamil keyboard tamilvisai
ஆனால் டிட்டர் , பேஸ்புக் போன்ற தளங்களில் தமிழில் எழுத எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. ஐபோன் 4 க்கு மட்டும் செல்லினம் எனும் மென்பொருள் உள்ளது .
இது எல்லா செல்பேசிகளுக்குமானது :
எதையோ தேடிக்கொண்டிருந்த போது ஹரன்பிரசன்னா பதிவில் இந்த தீர்வை கண்டேன் , நண்பர் கிருபாசங்கர் இதற்க்காக ஒரு நிரலி செய்துள்ளார் . பிரமாதமாக வேலை செய்கிறது .
http://krupashankar.com/tam/ இந்த முகவரியை உங்கள் ஒபேரா மினி பிரவ்சரில் திறந்துகொள்ளுங்கள் , amma=அம்மா என்ற விதத்தில் தமிழில் அடியுங்கள், Translate பட்டனை கிளிக்குங்கள் , இப்போது கீழே பெட்டி பெட்டியாக தெரியும் , அதை காப்பி செய்து டிவிட்டர் , பேஸ்புக் அல்லது மெய்ல் எங்கும் பேஸ்ட் செய்துகொளுங்கள். பெட்டி பெட்டியாக தெரிவதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள் , ஒழுங்காக போய் சேரும் .
செல்போனில் தமிழ்செய்திகள் படிக்க இந்த மென்பொருள் உதவும் : http://www.newshunt.com/
முத்தமிழ் வித்தவர்களால் தமிழ் வாழ்வதோ வளர்வதோ இல்லை , இது போன்ற தன்னார்வல்ர்களே ஆரம்பம் முதல் தமிழை நவீன தொழில்நுட்பத்திற்க்கு கொண்டு சேர்க்க உழைத்துக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள்.
முகம் தெரியாத அவர்களுக்கெல்லாம் என் நன்றிகள்.
உதவிக்கு arangasamy -at- gmail.com
7 comments:
நண்பா,
அன்றிரவு நீ அதை
தொட்டு தழுவி
உறவாடிவிட்டு பிரிந்து சென்ற பின், உன் பிரிவை தாங்காமல்,
என்னுடன் வாழ பிடிக்காமல் -
என் படுக்கையிலிருந்து விழுந்து நடுநிசியில் தற்கொலை செய்துகொண்டது
என் ஐபோன்!
தெரிந்திருந்தால் விட்டுவிட்டு வந்திருக்க மாட்டேனே அண்ணே , கூட அழைத்து வந்திருப்பேனே ? :)
Hi, thanks a lot for posting about the app I developed. You can find more information about the SETT Browser in English here: http://www.dhablog.co.cc/2011/01/read-sinhalatamil-webpages-conveniently.html
Will it work on Android 3.0 Honeycomb Tablet to read Tamil?
nila Mahen
http://ezilnila.com
அரங்கண்..
blackberryயில் எப்படி தமிழில் mail படிப்பது?
என்னிடம் reliance blackberry 8330 உள்ளது.ஏதாவது மென்பொருள்/ app download உண்டா??
பதில் தரவும்.
சதீஷ் (மும்பை)
பிளாக்பெரியில் இயங்கும் ஓபேரா உள்ளது , அது தமிழ் படிக்க உதவும் .
ஆண்டாய்ட் 3 ல் இதே வழிமுறை வேலை செய்யும் .
ஓபேரா மினியில் சாம்சங் கேலக்ஷி டேபுக்கு தமிழ் கிடைத்தாலும் அவ்வளவு விசேசமாக இல்லை.
சரி கிடைத்தவரை லாபம்.
ஆனா நாஞ்சில் நாடன் வலைப்பக்கத்தை பார்வையிட தமிழ் போண்டே கெலக்ஷி டேப்புக்கு தேவையில்லை.ஒரு ஈபுக் ரீடரைப்போல் அவ்வளவு எளிதாக நாஞ்சில் நாடன் வலைத்தளத்திற்க்கு கேலக்ஷி டேப் சப்போர்ட் செய்கிறது.
யாராவது முயற்ச்சி செய்து பார்த்தீர்களா???
Post a Comment