December 26, 2010

செல்போனில் தமிழ் - UPDATE

கணிணியில் தமிழ் படிக்க , எழுத இப்போது  கிட்டத்தட்ட முழுமையான தீர்வு கிடைத்துவிட்டது எனலாம் ,

உதவிக்கு இங்கே பார்க்கலாம் .


ஆனால் கையிலேயே இருக்கும் செல்போனில் தமிழில் படிக்க எழுத முழுமையான தீர்வு இல்லாமல் இருந்தது.ஐபோனிலும் நோக்கியாவின் சில மாடல்களிலும் மட்டுமே தமிழ் படிக்கும் வசதி இருக்கிறது .



Update : எல்லா செல்போன்களிலும் தமிழ் படிக்க ஒபேரா மினி பிரவ்சர் உதவுகிறது , உதவிக்கு இங்கே(இந்த வழிமுறை ஆண்டாய்ட் மொபைலுக்கு மட்டுமல்லாமல் எல்லா செல்பேசிகளுக்கும் பொருந்தும்)


ஆண்ட்ராய்ட் (Android) போன்களுக்கு மட்டுமேயான தமிழ் உலவி ஒன்று (SETT Browser) வெளியிடப்பட்டுள்ளது , மிகச்சிறப்பாக இயங்குகிறது , பதிவிறக்க இங்கே செல்லவும் (இதை செய்தவர் இலங்கை வாழ் சிங்கள மாணவர் , தன் கல்லூரி பயிற்சிக்காக செய்துள்ளார்)


Update : Android போனுக்கு தமிழ் கீபோட் செய்துள்ளார்கள் , அது வெற்றிகரமாக இயங்குகிறது , http://twitter.com/gurujegadeesan
Download android tamil keyboard tamilvisai


ஆனால் டிட்டர் , பேஸ்புக் போன்ற தளங்களில் தமிழில் எழுத எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. ஐபோன் 4 க்கு மட்டும் செல்லினம்  எனும் மென்பொருள் உள்ளது .

இது எல்லா செல்பேசிகளுக்குமானது :

எதையோ தேடிக்கொண்டிருந்த போது ஹரன்பிரசன்னா பதிவில் இந்த தீர்வை கண்டேன் , நண்பர் கிருபாசங்கர்  இதற்க்காக ஒரு நிரலி செய்துள்ளார் . பிரமாதமாக வேலை செய்கிறது .

http://krupashankar.com/tam/ இந்த முகவரியை உங்கள் ஒபேரா மினி பிரவ்சரில் திறந்துகொள்ளுங்கள் , amma=அம்மா என்ற விதத்தில் தமிழில் அடியுங்கள், Translate பட்டனை கிளிக்குங்கள் , இப்போது கீழே பெட்டி பெட்டியாக தெரியும் , அதை காப்பி செய்து டிவிட்டர் , பேஸ்புக் அல்லது மெய்ல் எங்கும் பேஸ்ட் செய்துகொளுங்கள். பெட்டி பெட்டியாக தெரிவதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள் , ஒழுங்காக போய் சேரும் .



செல்போனில் தமிழ்செய்திகள் படிக்க இந்த மென்பொருள் உதவும் : http://www.newshunt.com/

முத்தமிழ் வித்தவர்களால் தமிழ் வாழ்வதோ வளர்வதோ இல்லை , இது போன்ற தன்னார்வல்ர்களே ஆரம்பம் முதல் தமிழை நவீன தொழில்நுட்பத்திற்க்கு கொண்டு சேர்க்க உழைத்துக் கொண்டுள்ளார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள்.

முகம் தெரியாத அவர்களுக்கெல்லாம் என் நன்றிகள்.

உதவிக்கு arangasamy -at- gmail.com

December 16, 2010

விஷ்ணுபுரம் விருது - அழைப்பு

நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்...

 

விஷ்ணுபுரம் விருது விழா – 2010

விஷ்ணுபுரம் விருது விழா – 2010
மூத்த படைப்பாளி  ஆ.மாதவனுக்கு விருது வழங்குதல் மற்றும் ஆமாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய கடைத்தெருவின் கலைஞன்நூல் வெளியீடு.
இடம் : பிஎஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கம்
– அவினாசி சாலை கோயமுத்தூர் .
நாள் : டிசம்பர் 19 – 2010 ஞாயிறு : நேரம் மாலை 5 மணி
நிகழ்ச்சி நிரல்
தலைமை: கோவை ஞானி – விமர்சகர்
வரவேற்புரை : பேராசிரியை எம்.ஏ.சுசீலா (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
விருது வழங்குபவர் :டாக்டர் புனத்தில் குஞ்ஞப்துல்லா – மலையாள நாவலாசிரியர்]
நூல் வெளியிட்டு ஆ.மாதவனை கௌரவிப்பவர்: மணிரத்தினம் – இயக்குநர்
வாழ்த்துரை : நாஞ்சில்நாடன் – எழுத்தாளர்
வாழ்த்துரை : வேதசகாயகுமார்- விமர்சகர்
வாழ்த்துரை : ஜெயமோகன்- எழுத்தாளர்
நன்றியுரை: செல்வேந்திரன் (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க தங்களை அன்புடன் அழைக்கிறது.
தொடர்புக்கு : vishnupuram.vattam@gmail.com +91 94421 10123
http://www.jeyamohan.in/?p=9302


November 7, 2010

நாஞ்சிலின் இணையதளம்

நாஞ்சில் - சுல்த்தான் - இணையம்

நீண்ட காலமாக எல்லோரும் நாஞ்சில் நாடனை இணையத்தில் எழுதுங்கள் என வற்புருத்திவந்தோம் , அவரும் ஆயிரம் காரணங்களை சொல்லி தவித்து வந்தார் , ஆனால் எங்களில் யாருக்கும் நாஞ்சிலின் அச்சு படைப்புகளை இணையத்திற்க்கு மாற்றலாம் என்று தோன்றவில்லை அல்லது சோம்பல் .




திடீரென நாஞ்சில்நாடன் என ஒரு தளம் முளைத்தது , அவரது படைப்புகளை இணைமேற்ற துவங்கியது , யார் அது என யாருக்கும் தெரியவில்லை , தளத்தை நடத்துபவரே ஒரு பின்னூட்டத்தில் நாஞ்சிலை எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்டார் . தொடர்ந்த உழைப்பின் மூலம் நாஞ்சிலின் படைப்புகள் இணைய உலகம் வந்தடைந்தது,

அந்த இணையத்தை துவக்கியவர் சுல்த்தான் , திருநெல்வேலிக்காரர் , அரபுநாடு ஒன்றில் உள்ளார் , நாஞ்சிலின் நீண்டநாள் வாசகர் , சும்மா ஒரு முயற்ச்சி செய்யலாமேன்னு ஆரம்பிச்சேன் சார் , இவ்வளவு வரவேற்ப்பு இருக்கும் என நினைக்கலை என்று வியக்கிறார் , 

இப்போது நாஞ்சிலே வாரம் ஒருமுறை இணைத்தில் எழுதப்போவதாக சொல்கிறார் , நல்ல விளைவாக நாஞ்சிலின் புத்தகங்கள் விற்பனையும் உயரத்துவங்கியுள்ளது ,


மனமார்ந்த நன்றியும் வாழத்துக்களும் சுல்த்தான் .

நாஞ்சில்நாடன் இணையம் : http://nanjilnadan.wordpress.com/

August 31, 2010

ஊட்டி நித்யா அரங்கு 2010

நீண்ட நாட்களாக தொலைபேசிக் கொண்டிருந்த நண்பர்களை நேரில் காணும் மகிழ்ச்சி ,நவீன கவிதையை கண்டாலே பக்கத்தை புரட்டிவிடும் வேகம் , பள்ளியில் மனனம் செய்த கம்பராமாயண பாடல்களும் , கிராமத்தில் மார்கழி பஜனையில்  பாடிய திருப்பாவையுமே தெரிந்த சங்க இலக்கியம் ,

இந்த மனநிலையில்தான் ஊட்டியை அடைந்தேன் , பிரமாதமான குளிர் .இந்த நிகழ்ச்சி எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரும் திறப்பு , மேலும் எழுத எண்ணமுண்டு ,
ஜெயமோகனின் கட்டுரை http://www.jeyamohan.in/?p=7975

இப்போதைக்கு புகைப்படங்கள் மட்டும் , ஆல்பம்

ராவணன்
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJmLaxman#
சிறில் அலக்ஸ்
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJMCyril#


July 25, 2010

வாழ்க்கையென்பது ...

வாழ்க்கையென்பது ... எனத் தொடங்கி பல வாசகங்களை கேட்டிருக்கிறேன் , இவை போல தைத்தவை ஏதுமில்லை .

ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் காசர்கோட்டுக்கு அருகே உள்ள கும்பளா என்ற ஊருக்குச் சென்றேன். காலையின் முதல் ரயிலில் விழுவதற்காக ரயில்பாதையோரமாக சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தருணத்தை நான் என் உக்கிரமான இலக்கியப்படைப்பு ஒன்றிலேயே மீண்டும் சொல்லில் நிகழ்த்திக்காட்ட முடியும். விடிகாலையின் பேரழகில் தற்செயலாக , அல்லது மிக இயல்பாக ஈடுபட்டேன் என்று சொல்லவேண்டும். காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.


இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.


அன்றிலிருந்து இன்று வரை இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் உண்மையில் வாழ்ந்தேனா என்றறிய விடாது நாட்குறிப்புகள் எழுதி வருகிறேன். நான் சோர்ந்திருந்த நாட்கள் மிக அபூர்வம். நம்பிக்கையிழந்த கணங்களே இல்லை. துயரமடைந்த பொழுதுகள் மிகமிகச்சில. அவற்றை உடனே என் எழுத்தின் கலை மூலம் உவகையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இயற்கையுடனான உறவைக் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கணமும் என் உள்ளப்படியே வாழ்கிறேன்



மறக்க கூடாத , நினைவில் இருந்தால் வாழ்க்கையை சுலபமாகும் வாசகங்கள் . சொன்னவர் ஜெயமோகன் .

அலைகளென்பவை….

May 5, 2010

கலாப்பிரியா படைப்புக் களம் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

நண்பர்களே ,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது ,

இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் .

படைப்பாளிகள் ஜெயமோகன் , சுகுமாரன் , மரபின் மைந்தன் , வெண்ணிலா, வா.மணிகண்டன் , ஆகியோர் கலந்துடையாடுகின்றனர் ,
நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார் ,

வண்ணதாசன் ,  வண்ணநிலவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் ,

கலாப்பிரியா அவர்கள் தன் படைப்பனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ,

வரவேற்ப்பவர் செல்வி.கனகலட்சுமி , தொகுத்துரைப்பவர் நண்பர் செல்வேந்திரன்,

சனிக்கிழமை காலையிலிருந்தே ஜெயமோகன் அவர்கள் நம்மோடு கோவையில் இருப்பார் .

அனைவரையும் மிக்க அன்போடு எதிர்பார்க்கிறோம் .

தொடர்புக்கு . அரங்கசாமி 9344433123 , அருண் 97509 85863


April 3, 2010

நான் எனும் நான்

நான் அரங்கசாமி , பொள்ளாச்சி அல்லது உடுமலைப்பேட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ,
தந்தை பெரிய K.R என்று அழைக்கப்பட்ட K.R.வெங்கிடசாமி ,
படிப்பு  ரெட்டியார்மடம் நாச்சிமுத்துக் கவுண்டர் பள்ளியிலும் ,பெரியநாய்க்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயத்திலும்.

வாழ்க்கை சுழற்றி ஊரைவிட்டு உடுமலைக்கும் பின் திருப்பூருக்கும் இப்போது கோவைக்கும் அனுப்பியது , கோவையை தலைமையிடமாக கொண்டு ஒரு கணினி நிறுவனம் நடத்தி வருகிறேன் .

 2000 வாக்கில் உடுமலையில் சீனிமோகன் என்று ஒரு நண்பர் , அமராவதி சைனிக் பள்ளி ஆசிரியர் , சிறுகதை எழுத்தாளர் , கனமாக இருப்பதால் வைத்துக் கொள்ளச் சொல்லி :) ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரலை கொடுத்தார் . (சீனிமோகன் சார் , எந்தெந்த புத்தகங்களை திருப்பி தரவில்லை என லிஸ்ட் சொல்ல கூடாது).இலக்கியத்தின் பால் கவனம் திரும்பியது , ஜெயமோகன் எழுத்துக்கள் தொடந்து கவர்ந்தன ,

நல்ல விமர்சகருமான ஜெயமோகன் வழியாகவே எஸ்.ரா , சு.வெங்கடேசன் , ப.சிங்காரம் என எல்லா தரப்பு இலக்கியங்களும் அறிமுகமாயின ,

இந்திய ஞானம் , வரலாறு அறிதல் குறித்த ஆர்வம் உண்டு , 

படித்ததை , பார்த்ததை , ரசித்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த தளம் .