நீண்ட நாட்களாக தொலைபேசிக் கொண்டிருந்த நண்பர்களை நேரில் காணும் மகிழ்ச்சி ,நவீன கவிதையை கண்டாலே பக்கத்தை புரட்டிவிடும் வேகம் , பள்ளியில் மனனம் செய்த கம்பராமாயண பாடல்களும் , கிராமத்தில் மார்கழி பஜனையில் பாடிய திருப்பாவையுமே தெரிந்த சங்க இலக்கியம் ,
இந்த மனநிலையில்தான் ஊட்டியை அடைந்தேன் , பிரமாதமான குளிர் .இந்த நிகழ்ச்சி எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரும் திறப்பு , மேலும் எழுத எண்ணமுண்டு ,
ஜெயமோகனின் கட்டுரை http://www.jeyamohan.in/?p=7975
இப்போதைக்கு புகைப்படங்கள் மட்டும் , ஆல்பம்
ராவணன்
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJmLaxman#
சிறில் அலக்ஸ்
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJMCyril#
August 31, 2010
July 25, 2010
வாழ்க்கையென்பது ...
வாழ்க்கையென்பது ... எனத் தொடங்கி பல வாசகங்களை கேட்டிருக்கிறேன் , இவை போல தைத்தவை ஏதுமில்லை .
மறக்க கூடாத , நினைவில் இருந்தால் வாழ்க்கையை சுலபமாகும் வாசகங்கள் . சொன்னவர் ஜெயமோகன் .
ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் காசர்கோட்டுக்கு அருகே உள்ள கும்பளா என்ற ஊருக்குச் சென்றேன். காலையின் முதல் ரயிலில் விழுவதற்காக ரயில்பாதையோரமாக சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தருணத்தை நான் என் உக்கிரமான இலக்கியப்படைப்பு ஒன்றிலேயே மீண்டும் சொல்லில் நிகழ்த்திக்காட்ட முடியும். விடிகாலையின் பேரழகில் தற்செயலாக , அல்லது மிக இயல்பாக ஈடுபட்டேன் என்று சொல்லவேண்டும். காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.
இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் உண்மையில் வாழ்ந்தேனா என்றறிய விடாது நாட்குறிப்புகள் எழுதி வருகிறேன். நான் சோர்ந்திருந்த நாட்கள் மிக அபூர்வம். நம்பிக்கையிழந்த கணங்களே இல்லை. துயரமடைந்த பொழுதுகள் மிகமிகச்சில. அவற்றை உடனே என் எழுத்தின் கலை மூலம் உவகையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இயற்கையுடனான உறவைக் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கணமும் என் உள்ளப்படியே வாழ்கிறேன்
மறக்க கூடாத , நினைவில் இருந்தால் வாழ்க்கையை சுலபமாகும் வாசகங்கள் . சொன்னவர் ஜெயமோகன் .
அலைகளென்பவை….
May 5, 2010
கலாப்பிரியா படைப்புக் களம் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
நண்பர்களே ,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது ,
இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் .
படைப்பாளிகள் ஜெயமோகன் , சுகுமாரன் , மரபின் மைந்தன் , வெண்ணிலா, வா.மணிகண்டன் , ஆகியோர் கலந்துடையாடுகின்றனர் ,
நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார் ,
வண்ணதாசன் , வண்ணநிலவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் ,
கலாப்பிரியா அவர்கள் தன் படைப்பனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ,
வரவேற்ப்பவர் செல்வி.கனகலட்சுமி , தொகுத்துரைப்பவர் நண்பர் செல்வேந்திரன்,
சனிக்கிழமை காலையிலிருந்தே ஜெயமோகன் அவர்கள் நம்மோடு கோவையில் இருப்பார் .
அனைவரையும் மிக்க அன்போடு எதிர்பார்க்கிறோம் .
தொடர்புக்கு . அரங்கசாமி 9344433123 , அருண் 97509 85863

April 3, 2010
நான் எனும் நான்
நான் அரங்கசாமி , பொள்ளாச்சி அல்லது உடுமலைப்பேட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ,
தந்தை பெரிய K.R என்று அழைக்கப்பட்ட K.R.வெங்கிடசாமி ,
படிப்பு ரெட்டியார்மடம் நாச்சிமுத்துக் கவுண்டர் பள்ளியிலும் ,பெரியநாய்க்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயத்திலும்.
வாழ்க்கை சுழற்றி ஊரைவிட்டு உடுமலைக்கும் பின் திருப்பூருக்கும் இப்போது கோவைக்கும் அனுப்பியது , கோவையை தலைமையிடமாக கொண்டு ஒரு கணினி நிறுவனம் நடத்தி வருகிறேன் .
2000 வாக்கில் உடுமலையில் சீனிமோகன் என்று ஒரு நண்பர் , அமராவதி சைனிக் பள்ளி ஆசிரியர் , சிறுகதை எழுத்தாளர் , கனமாக இருப்பதால் வைத்துக் கொள்ளச் சொல்லி :) ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரலை கொடுத்தார் . (சீனிமோகன் சார் , எந்தெந்த புத்தகங்களை திருப்பி தரவில்லை என லிஸ்ட் சொல்ல கூடாது).இலக்கியத்தின் பால் கவனம் திரும்பியது , ஜெயமோகன் எழுத்துக்கள் தொடந்து கவர்ந்தன ,
நல்ல விமர்சகருமான ஜெயமோகன் வழியாகவே எஸ்.ரா , சு.வெங்கடேசன் , ப.சிங்காரம் என எல்லா தரப்பு இலக்கியங்களும் அறிமுகமாயின ,
இந்திய ஞானம் , வரலாறு அறிதல் குறித்த ஆர்வம் உண்டு ,
படித்ததை , பார்த்ததை , ரசித்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த தளம் .

Labels:
அரங்கசாமி,
குண்டலப்பட்டி,
கோவை அரன்,
ஜெயமோகன்
Subscribe to:
Posts (Atom)