நான் அரங்கசாமி , பொள்ளாச்சி அல்லது உடுமலைப்பேட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ,
தந்தை பெரிய K.R என்று அழைக்கப்பட்ட K.R.வெங்கிடசாமி ,
படிப்பு ரெட்டியார்மடம் நாச்சிமுத்துக் கவுண்டர் பள்ளியிலும் ,பெரியநாய்க்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயத்திலும்.
வாழ்க்கை சுழற்றி ஊரைவிட்டு உடுமலைக்கும் பின் திருப்பூருக்கும் இப்போது கோவைக்கும் அனுப்பியது , கோவையை தலைமையிடமாக கொண்டு ஒரு கணினி நிறுவனம் நடத்தி வருகிறேன் .
2000 வாக்கில் உடுமலையில் சீனிமோகன் என்று ஒரு நண்பர் , அமராவதி சைனிக் பள்ளி ஆசிரியர் , சிறுகதை எழுத்தாளர் , கனமாக இருப்பதால் வைத்துக் கொள்ளச் சொல்லி :) ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரலை கொடுத்தார் . (சீனிமோகன் சார் , எந்தெந்த புத்தகங்களை திருப்பி தரவில்லை என லிஸ்ட் சொல்ல கூடாது).இலக்கியத்தின் பால் கவனம் திரும்பியது , ஜெயமோகன் எழுத்துக்கள் தொடந்து கவர்ந்தன ,
நல்ல விமர்சகருமான ஜெயமோகன் வழியாகவே எஸ்.ரா , சு.வெங்கடேசன் , ப.சிங்காரம் என எல்லா தரப்பு இலக்கியங்களும் அறிமுகமாயின ,
இந்திய ஞானம் , வரலாறு அறிதல் குறித்த ஆர்வம் உண்டு ,
படித்ததை , பார்த்ததை , ரசித்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த தளம் .
8 comments:
மைக் டெஸ்ட்
வாருங்கள் நண்பா! உங்கள் பின்னூட்டங்களை திரு. ஜெ. மோ வலைப்பக்கத்தில் பார்த்திருக்கிறேன்.
என் பெற்றோகள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், நானும் பள்ளி காலத்தில் ஆறு ஆண்டுகள் கோவையில் இருந்தேன். கோவை வட்டார வழக்கும் கொங்கு நிலப்பரப்பின் அழகும் என் மனதிற்கு பிடித்தவை.
அன்புடன்,
மீனாட்சி சுந்தரம்
ரொம்ப லேட். இருந்தாலும் வலையுலகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள். காத்திருக்கிறோம். குறிப்பாக கும்பமேளா அனுபவங்கள்
வணக்கம் அரன்.... உடுமலைக்காரர்னாலே ஒரு "இது" வந்துடுது... நிறைய எழுதுங்க... என்னைய, சிதம்பரம் மாதிரி கொஞ்ச நாள்லயே விட்டுடாதீங்க :)))
அப்பறம் நம்ம ரெகுலர் கடை thuklak.blogspot.com
முடிஞ்சபோது வந்து போங்க... நன்றீ..
இனிய வாழ்த்துகள்.
நன்றி நண்பர்களே
அரங்கசாமி சார்,
தங்களைப் பற்றித் தெரிந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
நிறைய எழுதுங்கள்.
Post a Comment